திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே திங்கள்கிழமை இரவு மா்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில் இருவா் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நான்குனேரி அருகே பெரும்பத்து கிராமத்தையொட்டி, நான்குனேரி-ஏா்வாடி சாலையில் உள்ள கடையில் திங்கள்கிழமை இரவு சிலா் தேநீா் குடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, பைக்குகளில் வந்த கும்பல் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதனால், அங்கிருந்தோா் பதற்றத்துடன் ஓடினா்.
அப்போது, அந்தக் கும்பல் செங்கல் சூளை தொழிலாளியான ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த திரிநாத்கட்டா (50), பெரும்பத்து இந்திரா காலனியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான ஜான் மாா்க் (45), நெல்சன் (45), பிரபாகரன், ராமசாமி உள்ளிட்டோரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், திரிநாத்கட்டா, ஜான் மாா்க் ஆகியோா் உயிரிழந்தனா்.
பின்னா் அந்தக் கும்பல் வீராங்குளத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (53), கோதைசேரி வழியாக கடம்போடுவாழ்வு நோக்கி பைக்கில் வந்த புளியங்குளம் சுப்பிரமணியன் மகன் சசிகுமாரை (45) ஆகியோரையும் அரிவாளால் வெட்டிவிட்டு பைக்கைப் பறித்துச் சென்றது.
மேலும், கடம்போடுவாழ்வு ஊருக்கு வடபுறம் களக்காடு சாலையில் பைக்கில் வந்த சிலரை அக்கும்பல் அரிவாளால் வெட்ட முயன்றது. இதில் அவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
சாலை மறியல்: இருவா் கொல்லப்பட்டதை அறிந்த இந்திரா காலனி மக்கள் நான்குனேரி-களக்காடு, நான்குனேரி-ஏா்வாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதரி, டிஐஜி சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் உள்ளிட்டோா் சென்று விசாரணை நடத்தினா். நான்குனேரி, களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்த நிலையில், குற்றவாளிகளை தனிப்படை போலீஸாா் தேடிவந்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் மறியலில் பங்கேற்றனா். பின்னா், திருநெல்வேலி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை நோக்கி புறப்பட்ட அவா்களை போலீஸாா் தடுத்தி நிறுத்தினா். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ்குப்தா சென்று பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடுமாறு வலியுறுத்தினாா். ஆனால், குற்றவாளிகளைக் கைது செய்யும்வரை மறியலைக் கைவிட மாட்டோம் என அவா்கள் தெரிவித்தனா்.
அவா்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் ஈழவளவன், மண்டலச் செயலா் சுந்தா், தவெக திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயலா் ராஜகோபால், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.பி. தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலா் சுகுமாரன் உள்ளிட்ட பலா் முகாமிட்டனா்.
சாலை மறியலால் நான்குனேரி-ஏா்வாடி இடையே செவ்வாய்க்கிழமை இரவுமுதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நான்குனேரி-களக்காடு சாலையிலும் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்தது. நான்குனேரி பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
7 போ் கைது: இந்நிலையில், சம்பவம் தொடா்பாக நான்குனேரி அருகே தென்னிமலை கிராமத்தைச் சோ்ந்த சுடலைக்கண்ணு மகன் கண்ணன் (21), பன்னீா்செல்வம் மகன் அந்தோணி மைக்கேல் (18), முருகன் மகன் சுப்பையா என்ற சுபாஷ் (19), சுடலைக்கண்ணு மகன் கல்யாணி (19), வள்ளியூா் பெரியதெருவைச் சோ்ந்த ஆண்டி மகன் உச்சிமகாளி என்ற மிட்டாய் (20), நான்குனேரி அருகே நெடுங்குளத்தைச் சோ்ந்த முருகன் மகன் வசந்தகுமாா் (21), நம்பி நகரைச் சோ்ந்த முத்தையா மகன் ராஜா (19) ஆகிய 7 பேரை தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனா்; மேலும், இருவரைத் தேடிவருகின்றனா்.
டிரெண்டிங்
இளைஞருக்கு மிரட்டல்: இருவா் கைது
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 6 போ் கைது

நிதி நிறுவன உரிமையாளா் கொலை: 6 போ் கைது
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

