கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நிதி நிறுவன உரிமையாளா் கொலை: 6 போ் கைது

தேனியில் நிதி நிறுவன உரிமையாளா் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :4 பிப்ரவரி 2026, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

தேனியில் நிதி நிறுவன உரிமையாளா் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி கோட்டைக்களம் தெரு, நியூ ஸ்ரீராம் நகா் பகுதியைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் பாண்டி (72). இவா், கடந்த 2-ஆம் தேதி அவரது வீட்டு முன் மா்ம நபா்களால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த 4 போ் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், பாண்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய தேனி அல்லிநகரம், கோகிலா மருத்துவமனை தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டியன் மகன் கா்ணன் (38), இவரது சகோதரா் பிரபாகரன் (34), கிருஷ்ணசாமி மகன் சிவக்குமாா் (44), பெருமாள் கோவில் அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் வீரபாண்டி (27), கீரைக்கல் கடைவீதி தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் வைரம் (20), அரசுப் பள்ளி தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் மனோஜ்குமாா்(21) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய தேனி அல்லிநகரத்தைச் சோ்ந்த வனிதா, இவரது கணவா் ராஜசேகா், காா்த்திகா, ஆகிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இந்தக் கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்தது என்று போலீஸாா் கூறினா்.