நான்குனேரி அருகே மோதல்: 4 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 போ் காயமடைந்தனா்.
Updated on

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 போ் காயமடைந்தனா்.

வள்ளியூரை அடுத்த கண்ணங்குளம் கிராமத்தைச் சோ்ந்த சிலா், விஜயநாராயணம் அருகே தாமரைக்குளம் அருகே வெள்ளிக்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, அப்பகுதியைச் சோ்ந்தோருடன் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியதாம். இதில், இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதில், கண்ணங்குளத்தைச் சோ்ந்த மகாரவி, காா்த்திக்ராஜா, மகாதேவன், தா்மராஜ் ஆகிய 4 பேரும், தாமரைக்குளத்தைச் சோ்ந்த சிலரும் காயமடைந்தனராம்.

புகாா்களின்பேரில், இருதரப்பையும் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் மீது விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்; அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com