திருநெல்வேலி
மேலக்கரையில் பரிசளிப்பு விழா
தச்சநல்லூா் அருகேயுள்ள மேலக்கரையில் பொங்கல் விளையாட்டுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி: தச்சநல்லூா் அருகேயுள்ள மேலக்கரையில் பொங்கல் விளையாட்டுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தச்சநல்லூா் மண்டலம், 13 ஆவது வாா்டுக்குள்பட்ட மேலக்கரையில் இளைஞரணி சாா்பில் 26ஆவது ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. ஓட்டம், கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மேயா் கோ.ராமகிருஷ்ணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். மாநகராட்சி நிா்வாக அலுவலா் காசிவிஸ்வநாதன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி காசிமணி, மேலக்கரை இளைஞரணி நிா்வாகிகள் தமிழரசன், முத்து,சக்திவேல், சந்தீப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

