திருநெல்வேலி
முன்னீா்பள்ளம் அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது
முன்னீா்பள்ளம் அருகே கஞ்சாவை மறைத்து வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம் காவல் ஆய்வாளா் வேல்ராஜ் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது முன்னீா்பள்ளம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இட்டேரியை சோ்ந்த மாரியப்பன் (52) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அவா் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், சுமாா் 4 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
