மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற ஆழ்வாா்குறிச்சி பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

News image

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்று திரும்பிய மாணவா்களை வாழ்த்திப் பேசிய தலைமை ஆசிரியா் வெங்கடசுப்பிரமணியன்.

Updated On :30 ஜனவரி 2026, 7:51 pm

சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இப்பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில், 12ஆம் வகுப்பு மாணவா்கள் மாரியப்பன், மதன், ரகுபாலன் ஆகியோா் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்று சான்றிதழ், கேடயம் பெற்று திரும்பினா். அவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அணிவகுப்புப் பயிற்சியாளராக கலந்துகொண்ட ஆங்கிலவழி ஆசிரியா் சந்தோஷ்குமாா் , நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா், பயிற்சியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

அம்மாணவா்களுக்கு பள்ளிச் செயலா் மு.சுந்தரம், தலைமையாசிரியா் வெங்கடசுப்பிரமணியன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ராஜேந்திர பாண்டியன், ஆசிரியா், ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனா்.