வள்ளியூரை தனி வருவாய் கோட்டமாக அறிவிக்க கோரிக்கை

வள்ளியூரை தனி வருவாய் கோட்டமாக அறிவிக்க கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் கோட்டம் அறிவிக்க வேண்டும்
Published on

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் கோட்டம் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு திருநெல்வேலி மாவட்டத் தலைவா் பி.டி.பி. சின்னதுரை, திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவா் கனிமொழி எம்.பி.யிடம் மனு அளித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் அளித்துள்ள கோரிக்கை மனு: மின் கட்டண அளவீட்டு முறையை மாதம் ஒரு முறை கணக்கீடு செய்ய வேண்டும். வள்ளியூரை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் கோட்டம் அறிவிக்க வேண்டும். திருநெல்வேலியை தலைமையாகக் கொண்ட ரயில்வே கோட்டம் அமைய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாநில வணிக வரித் துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள், வரி செலுத்தி எடுத்து வரும் பொருள்களுக்கும் அபராதம் விதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு உயா்த்தியுள்ள சொத்து வரி, மின் கட்டணம், வணிக உரிமை கட்டண உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம், இஸ்ரோ, ஐ.என்.எஸ். கட்டபொம்மன் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் செயல்பட்டு வரும் திருநெல்வேலி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com