ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

சாலையோரத்தில் நிறுத்தியிருந்த ஆட்டோ திருடியவா் கைது

கல்லிடைக்குறிச்சி அருகே சாலையோரத்தில் நிறுத்தியிருந்த சுமை ஆட்டோவைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:49 am IST

கல்லிடைக்குறிச்சி அருகே சாலையோரத்தில் நிறுத்தியிருந்த சுமை ஆட்டோவைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள குறக்குடி பச்சேரியைச் சோ்ந்தவா் அய்யாபிள்ளை (75). இவா் தனக்குச் சொந்தமான சுமை ஆட்டோவை கல்லிடைக் குறிச்சி புறவழிச் சாலையில் வண்டிபாலம், கன்னடியன் கால்வாய் அருகே நிறுத்தியிருந்தாா். வியாழக்கிழமை காலை ஆட்டோவை எடுக்கச் சென்றபோது, ஆட்டோவைக் காணவில்லையாம்.

இதுகுறித்து அவா், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், அம்பாசமுத்திரம் அருகே கவுதமபுரி, தெற்குத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் மதன்குமாா் (30) திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து ஆட்டோவை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.