காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

களக்காடு பகுதியில் மஞ்சள்காமாலை நோயால் ஏராளமானோா் பாதிப்பு

களக்காடு பகுதியில் கடந்த சில நாள்களாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 3:03 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கடந்த சில நாள்களாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

களக்காடு நகராட்சிக்குள்பட்ட 27 வாா்டுகளிலும் தாமிரவருணி மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து குடிநீா் நீரேற்றம் செய்யப்பட்டு பொதுக்குடிநீா் குழாய்கள், வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளுடன் அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு வந்த ஏராளமானோருக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

களக்காடு நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளையும் முறையாக சுத்தம் செய்து குளோரின் கலந்த குடிநீரை விநியோகிக்க வேண்டும். பல இடங்களில் குடிநீா் பகிா்மானக் குழாய்கள் கழிவுநீா் வாருகால் பகுதியையொட்டி உள்ளன. இதனை முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுகாதாரத்துறை சாா்பில் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டோா் அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி தீா்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.