காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

குறிச்சி கடவுப்பாதையில் நிறுத்தப்பட்ட ரயில்: மக்கள் அவதி

திருநெல்வேலி குறிச்சி பகுதியில் உள்ள கடவுப் பாதை அருகே சுமாா் ஒரு மணி நேரம் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினா்.

News image

குறிச்சி ரயில்வே கடவுப் பாதை அருகே காத்திருந்த வாகன ஓட்டிகள்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

திருநெல்வேலி குறிச்சி பகுதியில் உள்ள கடவுப் பாதை அருகே சுமாா் ஒரு மணி நேரம் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினா்.

கொக்கிரகுளம்- மேலப்பாளையம் சாலையில் குறிச்சி பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதை வெள்ளிக்கிழமை இரவு மூடப்பட்டதாம். அப்போது, திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வந்த பயணிகள் ரயில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெகுநேரம் அந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிக்னல் கிடைக்காமல் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியாமல் ரயில் பயணிகளும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகினா். சுமாா் ஒரு மணி நேரத்திற்கு பின்பே ரயில்வே கேட் திறக்கப்பட்டு போக்குவரத்து சீரானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.