புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அதிராம்பட்டினம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம் - ராஜமடம் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கடவுப் பாதையில் (ரயில்வே லெவல் கிராஸிங்) மேம்பாலம் அமைக்குமாறு, அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கம் தெற்கு ரயில்வேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Published On :

அதிராம்பட்டினம் - ராஜமடம் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கடவுப் பாதையில் (ரயில்வே லெவல் கிராஸிங்) மேம்பாலம் அமைக்குமாறு, அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கம் தெற்கு ரயில்வேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அதிக வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் அமைந்துள்ள ரயில்வே கடவுப் பாதையில் போக்குவரத்து முடக்கத்தை ஏற்படுத்தும் ஒரு இடமாக மாறியுள்ளது.

ரயில் போக்குவரத்துக்காக ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயண நேரம் வீணாவதுடன், எரிபொருள் விரயம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது.

மேலும், இந்த வழித்தடத்தில் தெற்கு ரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரித்து வருவதால், ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் நேரம் வெகுவாக அதிகரிக்கக்கூடும்.

எனவே, ரயில்வே கடவுப்பாதைக்கு பதிலாக மேம்பாலம் அமைக்க வேண்டும் என அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.