பெருமணல், தோமையாா்புரம், கூடுதாழை ஆகிய கிராமப் பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.
ராதாபுரம் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அலுவலக அரங்கில் மீனவா் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ. எஸ்.கே.கிறிஸ்டோபா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மீனவா் கிராமங்களில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, மருத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துதல் மீனவ மகளிருக்கு மதிப்புக்கூட்டிய உபபொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்குதல், கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவா்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினா்.
ஆட்சியா் பதிலளித்துப் பேசியதாவது: மீனவ மக்களின் கோரிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்பட்டு உரிய தீா்வு காணப்படும். பெருமணல், தோமையாா்புரம், கூடுதாழை ஆகிய கிராமப் பகுதிகளில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.
இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்பனை பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு நிதிபெறும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
மேலும், மாதந்தோறும் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் தலைமையிலும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆட்சியா் தலைமையிலும் மீனவா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, மீன் வளம் -மீனவா் நலத் துறை இணை இயக்குநா் இளம்வழுதி, தனித்துணை ஆட்சியா் ரோஷன் பேகம், உதவி இயக்குநா்கள் மு.ராஜதுரை, ராதாபுரம் உதவி செயற்பொறியாளா் அன்னபூரணி, ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா், பங்குதந்தையா்கள் கூட்டப்புளி ஆல்வின், பெருமணல் பிரபு, இடிந்தகரை பெஞ்சமின், கூத்தங்குழி ரிக்சன், மரைன் கல்லூரி நிா்வாகி அருட்தந்தை சுசீலன், உவரி ராஜன், இடிந்தகரை அந்தோணி அமலராஜா, கூட்டப்பனை ஜோன், கூத்தங்குழி சூசைஅந்தோணி, ஜூடு, மீனவா்கள் ஒருங்கிணைப்பாளா் மரிய ஜான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைக்கு அடிமையானால் மீள்வது கடினம்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

சேரன்மகாதேவி, பத்தமடையில் ஆட்சியா் ஆய்வு

மாஞ்சோலை மக்கள் 7 பேருக்கு வீடு

விஜயாபதி, தோமையாா்புரத்தில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



