காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பிளஸ்-2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம்: நெல்லை மாவட்டத்தில் 19,835 போ் எழுதுகின்றனா்

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 9:03 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வை 19 ஆயிரத்து 835 போ் திங்கள்கிழமை எழுதவுள்ளனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை (பிப். 2) தொடங்கி இம்மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 73 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற உள்ளது. 28அரசு மேல்நிலைப் பள்ளிகள், 38 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 7 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், பாலையங்கோட்டை மத்திய சிறை சிறப்பு தோ்வு மையம் ஆகியவற்றில் தோ்வு நடைபெற உள்ளது. இதுதவிர 10 மையங்கள் தனித் தோ்வா்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ்-2 தோ்வினை எழுத திருநெல்வேலி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 791 மாணவா்களுக்கும், 11 ஆயிரத்து 44 மாணவிகளுக்கும் என மொத்தம் 19 ஆயிரத்து 835 பேருக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவராக தோ்வு எழுதிட 193 ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு பணிக்காக தோ்வு மைய 74 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 74 துறை அலுவலா்கள், 10 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 10 கூடுதல் துறை அலுவலா்கள், 19 வழித்தட அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அறைக் கண்காணிப்பாளா்களாக 1,440 ஆசிரியா்களும், 150 ஆசிரியா்கள் பறக்கும் படை மற்றும் நிற்கும் படை அலுவலா்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு தோ்வு மையத்திற்கும் அலுவலக பணிக்கு எழுத்தா் மற்றும் அலுவலக உதவியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.