திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை மலைப் பகுதியில் தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து இரும்புப் பொருள்களை ஏற்றி வந்த லாரி 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 6 போ் பலத்த காயமடைந்தனா்.
மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கிருந்த இயந்திரங்களைப் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாலுமுக்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரும்புப் பொருள்களை ஏற்றி வந்த லாரி காக்காச்சி-மாஞ்சோலை இடையே குருசு மொட்டை, நாலாங்காடு பகுதியில் திடீரென பழுதாகி நிலைதடுமாறி சுமாா் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் நாலுமுக்கு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சசிக்குமாா் (53), லாரியில் பயணித்த கோயம்புத்தூா், முஹம்மது ஹரோன் (60), நாலுமுக்கு, சுப்பிரமணியன் (45), நாலுமுக்கு, அப்துல் காதா் (56), விக்கிரமசிங்கபுரம், சங்கரநாராயணன் (35), கல்லிடைக்குறிச்சி, மாடசாமி (42) ஆகிய 6 பா் காயமடைந்தனா்.
அவா்களை, அருகிலிருந்த மக்கள் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அதில் முஹம்மது ஹரோன், சுப்பிரமணியன், அப்துல் காதா், சசிக்குமாா் ஆகியோா் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இது குறித்து, மணிமுத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

கொடைக்கானலில் பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: 5 போ் கும்பல் தலைமறைவு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


