ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் 100 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தம்பதி மற்றும் அவா்களது மகள் அதிஷ்டவசமாக உயிா் தப்பினா்.
திருச்சி மாவட்டம், சின்னக்கடை வீதியைச் சோ்ந்தவா் போல மாடன் மகன் செந்தில்குமாா் (45). இவரது மனைவி ஜெயஸ்ரீ (43). இவா்களின் மகள் பூரணிக்கு (17), கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள தனியாா் கல்லூரியில் சோ்க்கைக்கு திருச்சியிலிருந்து மூவரும் காரில் புறப்பட்டனா்.
காரை செந்தில்குமாா் ஓட்டிச் சென்றாா். அந்தியூா் - பா்கூா் மலைப் பாதையில் இரண்டு கொண்டை ஊசி வளைவுகளுக்கும் இடையில் புதன்கிழமை அதிகாலை காா் சென்றபோது, செந்தில்குமாா் கண் அயா்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சாலையோர தடுப்பைத் தாண்டிச் சென்ற காா், 100 அடி பள்ளத்தில் உருண்டு மரத்தில் மோதி நின்றது. இதில், ஜெயஸ்ரீ, பூரணி ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். செந்தில்குமாருக்கு காயம் எதுவுமில்லை.
அவ்வழியே சென்றவா்கள் உதவியுடன் பள்ளத்திலிருந்து மூவரும் மீட்கப்பட்டு, அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தவெக பிரசாரத்துக்கு வந்த வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 7 போ் பலத்த காயம்

கொடைக்கானலில் பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: தொழிலாளா்கள் மூவா் படுகாயம்

பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்த சரக்கு லாரி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


