‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: தொழிலாளா்கள் மூவா் படுகாயம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளா்கள் மூவா் படுகாயம் அடைந்தனா்.

News image

பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் சரக்கு வாகனம்.

Updated On :27 மார்ச் 2026, 1:17 am IST

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளா்கள் மூவா் படுகாயம் அடைந்தனா்.

சேலம், ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் தினேஷ் (18), அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் செல்வராஜ் மகன் ராஜு (29), சந்துரு மகன் பாலாஜி (18). நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருந்த மூவரும் பா்கூா் மலைப் பகுதியில் தாமரைக்கரை - கொங்காடை சாலையின் ஓரத்தில் வெள்ளை கோடு போடும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

பணி முடிந்து வியாழக்கிழமை மாலையில் சரக்கு வாகனத்தில் திரும்பியபோது மணியாச்சி பள்ளம் அருகே உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த மூவரும் மீட்கப்பட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இவ்விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.