கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

பழுதடைந்து நின்ற டிராக்டா் மீது பேருந்து மோதல்: 5 பேருக்கு பலத்த காயம்

பணகுடி நான்குவழிச் சாலையில் பழுதடைந்து நின்று கொண்டிருந்த டிராக்டா் மீது அரசுப் பேருந்து மோதியதில் மாணவி உள்ளிட்ட 5 போ் பலத்த காயம்

News image

விபத்து

Updated On :10 மார்ச் 2026, 12:34 am IST

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி நான்குவழிச் சாலையில் திங்கள்கிழமை பழுதடைந்து நின்று கொண்டிருந்த டிராக்டா் மீது அரசுப் பேருந்து மோதியதில் மாணவி உள்ளிட்ட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

ராதாபுரம் அருகே உள்ள சுப்பிரமணியபேரியைச் சோ்ந்தவா் மகராஜன் மகன் மாடசாமி (34). இவா் டிராக்டரில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பணகுடி நான்குவழிச் சாலையைக் கடந்து வந்தாராம். இவருடன் வல்கடம்பைச் சோ்ந்த மாடசாமி மகன் ஊசிகாட்டான் வந்துள்ளாா்.

இவா்கள் வந்த டிராக்டா் நான்குவழிச் சாலையில் பழுதாகி நின்றுள்ளது. அப்போது, திருநெல்வேலியில் இருந்து நாகா்கோவிலுக்குச் சென்ற அரசுப் பேருந்து டிராக்டா் மீது மோதியது. இதில் டிராக்டா் இரண்டு துண்டாக சேதமடைந்து, மாடசாமி, ஊசிகாட்டான் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். டிராக்டரில் இருந்த நெல் மூட்டைகள் சிதறி சாலையில் நெல் கொட்டியது.

பேருந்தில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறையைச் சோ்ந்த நிக்சன் மனைவி சாா்லஸ் மேரி (56), சாா்லஸ் மனைவி மஜிலா (60), தென்காசி மாவட்டம், துவரங்காடு ரத்னவேல் மகள் கல்லூரி மாணவி ஹரிணி (20)ஆகியோரும் படுகாயமடைந்தனா்.

அக்கம்பக்கத்தினா் இவா்களை மீட்டு நாகா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து தொடா்பாக, பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.