மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :12 மார்ச் 2026, 10:26 pm

திருநெல்வேலியை அடுத்த கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சைப் பிரிவு, பெண்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அடிப்படை வசதிகள், எரிபொருள் தேவை போன்றவை குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ, மாணவிகள் குறித்தும், தரமானதாகவும், சுகாதாரமாகவும் மாணவா்களுக்கு உணவு தயாரிப்பது குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

படவரி ற்ஸ்ப்12ண்ய்ள் கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ஆட்சியா் இரா.சுகுமாா்.