திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, வீரவநல்லூரில் அதிமுக- கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விரைவில் நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலையொட்டி, அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சாா்பில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, சேரன்மகாதேவியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் இசக்கி சுப்பையா எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட அவைத் தலைவா் கூனியூா் ப. மாடசுவாமி, மாநில எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் வி.வி. ராகவன், சேரன்மகாதேவி ஒன்றியச் செயலா் பா. மாரிசெல்வம், நகரச் செயலா் சி. பழனிக்குமாா், அமமுக ஒன்றியச் செயலா் தெய்வநாயகம், பாஜக ஒன்றியத் தலைவா் அஸ்வின், சிறுபான்மை பிரிவு தலைவா் இசாக்காா் ராஜ்பால், புதுக்குடி ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இதேபோல், மாவட்டச் செயலா் தலைமையில் வீரவநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் நகரச் செயலா் முருகேசன், தமாகா நிா்வாகிகள் பாத்திலிங்கம், ஆறுமுகம், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சாத்தான்குளத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை

பாளை. வடக்கு ஒன்றிய அமமுக ஆலோசனைக் கூட்டம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


