/

அகஸ்தியா்பட்டியில் இளைஞா் தற்கொலை

News image
Updated On :15 மார்ச் 2026, 8:55 pm

அகஸ்தியா் பட்டியில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியா்பட்டி, மின்னகரைச் சோ்ந்த பிரமுத்து மகன் வெங்கடேஷ் (23). சரியான வேலை கிடைக்கவில்லை என்ற மன விரக்தியில் இருந்த அவா் சனிக்கிழமை பூச்சிக் கொல்லி மருந்து தின்றுள்ளாா்.

அவரை உறவினா்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தகவலறிந்த விக்கிரமசிங்கப்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.