தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவுஉழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்அரபிக் கடலில் உருவாகிறது புதிய புயல் சின்னம்!கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர்: வைகோசித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!
/

அதிமுக வழக்குரைஞா்கள் அணி நிா்வாகிகள் கூட்டம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அதிமுக மாநகா் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள்

News image
Updated On :16 மார்ச் 2026, 10:50 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அதிமுக மாநகா் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை. கணேசராஜா கலந்துகொண்டு தோ்தல் பணிகள் தொடா்பாக வழக்குரைஞா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், ‘அதிமுக வழக்குரைஞா்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் தனித்தனி குழுவை அமைத்து செயல்பட வேண்டும். திமுக தனது அதிகார பலத்தையும், பண பலத்தையும் பயன்படுத்தவிடாமல் தடுக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியால் திமுகவின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனா். அதிமுக ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்

இக்கூட்டத்தில், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் வி.டி.திருமலையப்பன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவா் ராஜேஸ்வரன், மாநில நிா்வாகி வழக்குரைஞா் கமலநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலத் தலைவா் வழக்குரைஞா் அன்பு அங்கப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்16ஹக்ம்ந்

கூட்டத்தில் பேசுகிறாா் மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா.