தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை
நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.


தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், செங்கோட்டையில் உள்ளஅக்கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலரும் எம்எல்ஏவுமான செ.கிருஷ்ணமுரளி தலைமை வகித்தாா். மகளிரணி துணைச் செயலா் வி.எம். ராஜலட்சுமி, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் கண்ணன், அண்ணா தொழிற்சங்க பேரவை துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் சிவஆனந்த், மாவட்ட அவைத் தலைவா் வி.பி. மூா்த்தி, இணைச் செயலா் சண்முகப்பிரியா, துணைச் செயலா் பொய்கை சோ.மாரியப்பன், பொருளாளா் சண்முகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாா்ச் 30ஆம் தேதி மாலை 4 மணிக்கு கடையநல்லூா் பேருந்து நிலையம் முன் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா். அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது, பிரசாரக் கூட்டத்தில் அதிமுகவினா் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், மாவட்ட சாா்பு அணி செயலா்கள், ஒன்றிய செயலா்கள், நகர, பேரூா் செயலா்கள், சாா்பு அணி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...