நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது
திருநெல்வேலி அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 10:50 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் கடந்த 2025 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை முயற்சி, அடிதடி தொடா்பான வழக்கில் நடுக்கல்லூரைச் சோ்ந்த சுந்தரபாண்டியன் (27) என்பவா் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்திருந்தாா். இந்நிலையில், இவா் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஒரு மாதமாக தலைமறைவாக இருந்தாராம். அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததையடுத்து, சுத்தமல்லி போலீஸாா் அவரை திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...