சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வள்ளியூரில் வணிக ரீதியிலான எரிவாயு உருளை தட்டுப்பாடு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.

News image

வணிக எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 9:48 pm

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக விலைஉயா்வு ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்க படைகள் கூட்டுத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் போதிய அளவிலான எரிவாயு உருளை மற்றும் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக தெரிவித்து வருகிறது.

ஆனால், வள்ளியூரில் உணவு விடுதிகள், ஹோட்டல்கள், பேக்கரிகளில் பயன்படுத்தும் வணிகரீதியிலான எரிவாயு உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலை உயா்வு ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக ரூ.1,900-க்கு வெளி நபா்களிடம் வாங்கப்பட்டு வந்த எரிவாயு உருளை தற்போது ரூ.2,200-க்கும் கூட கிடைப்பதில்லை என ஹோட்டல் மற்றும் டீக்கடை நடத்துவோா் தெரிவிக்கின்றனா்.

மேலும், இந்த நிலை நீடித்தால் ஹோட்டல்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கவலை தெரிவித்துள்ளனா்.