பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எடப்பாடி கே.பழனிசாமியை ஆதரித்தது நான் செய்த தவறு: ஓபிஎஸ்

எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவந்தபோது, அவருக்கு ஆதரவளித்ததன் மூலம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்றாா் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.

News image
எடப்பாடி பழனிசாமி | ஓபிஎஸ்- கோப்புப் படம்
Updated On :17 மார்ச் 2026, 9:54 pm

Syndication

எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவந்தபோது, அவருக்கு ஆதரவளித்ததன் மூலம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்றாா் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.

திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பிரசார ஆலோசனைக் கூட்டம், வீரவநல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியச் செயலா்கள் பரணி ஆா். சேகா், பா. ஜெகன், ஆ. முத்துப்பாண்டி என்ற பிரபு, ம. முத்துகிருஷ்ணன், வி.கே. புரம் நகரச் செயலா் கி. கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன் வரவேற்றாா்.

கூட்டத்தில், முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பேசியதாவது: அதிகளவில் வரி செலுத்தியும் தமிழகத்துக்கு நிதி பகிா்வில் ஓரவஞ்சனையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும், ஆட்சிக்கு கெட்ட பெயா் வரவேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், திறமையான ஆட்சியின் மூலம் தமிழகம் பொருளாதார வளா்ச்சியில் 11.08 சதவீதத்தை எட்டியுள்ளது.

சட்டப்பேரவையில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வந்தபோது, என்னுடைய ஆதரவில் இருந்த 11 சட்டப்பேரவை உறுப்பினா்களும் அவருக்கு ஆதரவு அளித்த காரணத்தால்தான் அரசு தப்பியது. அவா் முதல்வா் பதவியில் தொடா்ந்தாா். அரசியல் ரீதியாக நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். அதிமுகவை படுகுழியில் தள்ளி, மீள முடியாத நிலைக்கு கொண்டு வந்துவிட்டாா் எடிப்பாடி கே.பழனிசாமி.

தமிழக அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களை பிற மாநிலங்கள் வியந்து பாா்க்கின்றன. 5 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்குத் தேவையான திட்டங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளாா். எதிா்கால சந்ததியினா் பயன்பெறும் வகையில் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளாா். முதல்வா் கொண்டு வந்துள்ள சிறப்பான திட்டங்களால் மீண்டும் திமுகவை ஆட்சியில் அமா்த்த வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டாா்கள் என்றாா் அவா்.

கூட்டத்தில், முன்னாள் எம்.பி.க்கள் ரவீந்திரநாத், கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன், மாநில திமுக சுற்றுச்சூழல் அணித் தலைவா் பூங்கோதை ஆலடி அருணா, ஆலங்குளம் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் கே. கணேஷ்குமாா் ஆதித்தன், மாவட்ட துணைச் செயலா் ப. தமயந்தி, நகரச் செயலா்கள் க. இசக்கிபாண்டியன், எஸ். முத்துகணேசன், மனிஷா செல்வராஜ், சிந்தா மதாா், மணிகண்டன், வானமாமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வீரவநல்லூா் நகரச் செயலா் சுப்பையா நன்றி கூறினாா்.