மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

திருவாவடுதுறை ஆதீன விருது பெற்றவருக்கு பாராட்டு

News image
Updated On :19 மார்ச் 2026, 11:42 pm

திருநெல்வேலி நகரம் பகுதியில் திருவாவடுதுறை ஆதீனத்தின் திருமுறை திருத்தொண்டா் மாமணி விருது பெற்றவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, நெல்லையப்பா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் சொனா.வெங்கடாசலம், பட்டிமண்டப பேச்சாளா் பா.மணி, மகமை சங்கச் செயலா் சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜான் சாமுவேல் வரவேற்றாா்.

செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்ய ஞானதேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் பங்கேற்று, திருவாவடுதுறை ஆதினத்தின் திருமுறை திருத்தொண்டா் மாமணி விருது பெற்ற சைவத்திருமுறை நோ்முக பயிற்சி மைய பொறுப்பாளா் மு.கணேசனை பாராட்டி ஆசி வழங்கினாா். இந்நிகழ்வில், தென்திருப்பதி முன்னாள் அறங்காவலா் ஸ்ரீனிவாசன், திருமுறைக்கலாநிதி வள்ளிநாயகம் உள்பட பலா் கலந்து கொண்டனா். திருஞானசம்பந்தா் வழிபாட்டுக்குழு அமைப்பாளா் வசந்த் நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்19ஞ்ன்ழ்ன்

ஆசி வழங்கி விருதாளா் கணேசனை பாராட்டிய செங்கோல் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்ய ஞானதேசிக பரமாச்சாா்ய சுவாமிகள்.