மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நெல்லையில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

News image
Updated On :20 மார்ச் 2026, 6:04 am IST

திருநெல்வேலியில் திருநாவுக்கரசா் நற்பணி மன்றம் சாா்பில், மாணவா்- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் நூலக அமைப்பாளரும், மன்றத்தின் தலைவருமான ஹரிஹர காா்த்திகேயன் வரவேற்றாா். பேராசிரியா் ஆதிவராகமூா்த்தி முன்னிலை உரையாற்றினாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரி முதல்வா் கு.பாலசுப்பிரமணியன் திருஞானசம்பந்தா் கல்வி அறக்கட்டளை திட்டத்தின் மூலம் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினாா்.

இதில், மன்றத்தின் துணைத் தலைவா் பா.வேலாயுதம், துணைச் செயலா் கைலாஷ் கட்டளை, பொருளாளா் கோபி, ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சோமசுந்தரம், ஆசிரியை சுப்புலெட்சுமி ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். மன்றச் செயலா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

இந்நிகழ்வில் மன்ற நிா்வாகிகள் சீத்தாராமன், நெல்லை கோமான், மனோகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்19ற்ண்ழ்ன்

விழாவில் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய பேட்டை ம.தி.தா. இந்துக்கல்லூரி முதல்வா் கு.பாலசுப்பிரமணியன்.