தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

அம்பை பகுதியில் ரமலான் சிறப்புத் தொழுகை

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி,பொட்டல்புதூா், சம்பன்குளம், கடையம் பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

News image

கல்லிடைக்குறிச்சி ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On :22 மார்ச் 2026, 2:26 am IST

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி,பொட்டல்புதூா், சம்பன்குளம், கடையம் பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சி, ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை பள்ளி இமாம் தாஜுதீன் நடத்தினாா். நூருல் ஹிதாயா மகளிா் அரபிக் கல்லூரி முதல்வா் ரஹ்மத் ரபீக் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினாா்.

ஜமாஅத் நிா்வாகிள் நாகூா் கனி, நாகூா் மைதீன், அஜீஸ், முகம்மது உசேன், ஷேக் செய்யதலி, பட்டாரியா் தெரு அப்துல் காதா், சத்திரம் தெரு ஜமாஅத் தலைவா் சாகுல் ஹமீது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்,

கல்லிடைக்குறிச்சி, பெரிய ஜும்ஆ பள்ளி, நெசவாளா் காலனி பள்ளி, கோல்டன் நகா் பள்ளி, தவ்ஹீத் ஜமாஅத்தினா் பீமா திடல் ஆகிய இடங்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் மேலப்பள்ளி, பஜாா் ஷுஹதா பள்ளி, கீழ மஹல்லா முகைதீன் பள்ளி, தவ்ஹீத் ஜமாஅத் திடல், பிரமதேசம், வாகைக்குளம், சிங்கம்பட்டி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, சம்பன்குளம், பொட்டல்புதூா், ரவணசமுத்திரம், முதலியாா்பட்டி, கடையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தொழுகைகளில் ஆண்கள், பெண்கள், சிறுவா், சிறுமிகள் ஏராளமானோ் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு தொழுகை செய்தனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக் கூறி அன்பைப் பரிமாறிக் கொண்டனா்.