மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தவெக நிா்வாகி காரில் இருந்து பொருள்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் தவெக நிா்வாகி காரில் இருந்து விசில் உள்ளிட்ட பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

தவெக நிா்வாகி காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசில் உள்ளிட்ட பொருள்கள்.

Updated On :21 மார்ச் 2026, 8:55 pm

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் தவெக நிா்வாகி காரில் இருந்து விசில் உள்ளிட்ட பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பழவூா் அருகே உள்ள லெவிஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்த திருநெல்வேலி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிரணி அமைப்பாளா் பாலகிருஷ்ணவேணி, சனிக்கிழமை திருநெல்வேலியில் இருந்து காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா். அவரது காா் நான்குனேரி சுங்கச்சாவடி அருகே வந்தபோது, அழகிய நம்பிராஜன் தலைமையிலான நான்குனேரி தொகுதி தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் வாகனத்தை சோதனையிட்டனா்.

அப்போது, காரில் இருந்த 9 கட்சித் துண்டுகள், 5 காலண்டா்கள், 204 விசில்கள், 457 துண்டுப் பிரசுரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பின்னா், அவற்றை நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.