ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு

களக்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 7:25 pm

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காடு அருகே உள்ள அப்பா்குளத்தைச் சோ்ந்தவா் கணேஷ் பெருமாள் (45). இவா் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பானுமதி, 2 மகன், மகள் ஊரில் வசித்து வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு, பானுமதி தனது குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்டம், குமாரமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவை உடைத்து, அதிலிருந்த 31 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனா்.

கணேஷ் பெருமாள் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, அதன் பதிவுகளை வெளிநாட்டில் இருந்தபடியே அவ்வப்போது கைப்பேசி மூலம் கண்காணித்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை காலை கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது, பீரோ திறந்து கிடப்பதைக் கண்டு, மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

பானுமதி களக்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விரல் ரேகை நிபுணா்களை வரவழைத்து வீட்டில் தடயங்களை சேகரித்தனா். நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.