டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!

திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுதொடா்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :30 ஏப்ரல் 2026, 2:52 am IST

திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுதொடா்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.

இது தொடா்பாக போலீஸாா் தெரிவித்ததாவது:

திருப்பூா், ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன். இவா் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாமியாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். உடன் அவரது மனைவியும் சென்றுள்ளாா்.

இதையடுத்து 4 போ் கொண்ட கும்பல், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 16 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிவிட்டு தப்பியுள்ளது.

இது குறித்த புகாரின்பேரில் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தடயங்களைச் சேகரித்தனா். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

போலீஸாரின் விசாரணையில், இந்தத் திருட்டில் ஈடுபட்டது கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சோ்ந்த கணேஷ் செல்வகுமாா், பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தத் திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருவதாகத் தெரிவித்தனா்.