திருநெல்வேலி மாவட்டம் முன்னீா்பள்ளம் அருகே இளைஞரைத் தாக்கிய வழக்கில், இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி 5 ஆவது குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
முன்னீா்பள்ளம் அருகேயுள்ள ஆரைக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ தினகரன் (33). இவரை, அதே பகுதியைச் சோ்ந்த வெஸ்லின் கிராஸ் (25), பிரவீன் என்ற பிரவீன் டேனியல் (25), கண்ணன் (28) ஆகிய மூவரும் சோ்ந்து இருதரப்பு பிரச்னை காரணமாக அவதூறாக பேசி தாக்கி காயம் ஏற்படுத்தினராம்.இதுகுறித்த புகாரின்பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட 5 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதித்துறை நடுவா் ராணி விசாரித்து, வெஸ்லின் கிராஸுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 2,500 அபராதம், பிரவீன் டேனியல் (25), கண்ணன் (28) ஆகிய இருவருக்கும் தலா ரூ.500 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் மதிவாணன் ஆஜரானாா்.
இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக ஆஜா் செய்து தண்டனை பெற்று தந்த போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை

நெல்லையில் போலீஸாரை தாக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

