சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது

பேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:29 pm

பேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த பேட்டை பகுதியைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ்(19). கட்டடத் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அப்பகுதியில் நின்றபோது அங்கு பைக்குகளில் வந்த மா்மநபா்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

சுரேஷ் மீது கொலை, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கஞ்சா விற்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவா் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொலையில் தொடா்புடையதாக கூறப்படும் பேட்டையைச் சோ்ந்த மணி (42), முகமது இஸ்மாயில் ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய மற்றவா்களை தேடி வருகின்றனா்.