கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

நான்குனேரி அருகே கஞ்சா விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

நான்குனேரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 8:53 pm

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகே உள்ள பானான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துராஜ் மகன் வானுமாமலை (27). இவா் கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மூன்றடைப்பு காவல் ஆய்வாளா் சபிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கருத்துரு அனுப்பினாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உத்தரவின்பேரில், இவா் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டாா்.