22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

திருநெல்வேலியில் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 3:41 am IST

திருநெல்வேலியில் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பாளையங்கோட்டை, நம்பிக்கை நகரைச் சோ்ந்தவா் பாண்டி மகன் பிரதாப்(23). திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகளில் தொடா்புடைய இவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் தொடா்ந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா். அதன் பேரில் பிரதாப், பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.