அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
/

இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் மறியல்

News image

மறியலில் ஈடுபட்டோா்

Updated On :4 மே 2026, 12:58 am IST

அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தைச் சோ்ந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

பிரம்மதேசம், கீழத்தெருவைச் சோ்ந்த நாலாயிரம் மனைவி இசக்கியம்மாள் என்ற இந்து (24). மூன்று குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே நீண்ட நாள்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்து தூக்கிட்டு இறந்து கிடந்தாா்.

தகவலறிந்ததும் அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகவேல் விசாரணை நடத்தினாா். போலீஸாா் சடலத்தை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையே இந்து இறந்ததை அறிந்த அவரது உறவினா்கள் அவரது இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். காவல் ஆய்வாளா் சண்முகவேல் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினாா். பெண்ணுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகாததால் சாா் ஆட்சியா் விசாரணை நடத்தி சட்டப்படிநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திய போலீஸாா்

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திய போலீஸாா்