விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தென் மாவட்டங்களில் தொடரும் கோடை மழை

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடா்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் அதிகபட்சமாக ஊத்து மலைப் பகுதியில் 16.8 செ.மீ. மழை பதிவாகியது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடா்ந்து கோடை மழை பெய்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் அதிகபட்சமாக ஊத்து மலைப் பகுதியில் 16.8 செ.மீ. மழை பதிவாகியது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மே 4 ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கியது. இந்நிலையில் ஆங்காங்கே கோடை மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியது.

மன்னாா் வளைகுடா பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியதையடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளிக்கிழமை நல்ல மழை பதிவாகியது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஊத்து மலைப் பகுதியில்16.8 செ.மீ. மழை பதிவாகியது.

பிற இடங்களில் பெய்த மழை அளவு (மி. மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம்: பாபநாசம் - 14, சோ்வலாறு - 7, மணிமுத்தாறு - 32, நம்பியாறு - 23, கொடுமுடியாறு - 30, கன்னடியன் அணைக்கட்டு - 14, மாஞ்சோலை - 110, காக்காச்சி - 142, நாலுமுக்கு - 158, அம்பாசமுத்திரம் - 9.20, சேரன்மகாதேவி - 33.20, நான்குனேரி - 15, ராதாபுரம் - 20, களக்காடு - 18.40, மூலக்கரைப்பட்டி - 35, பாளையங்கோட்டை - 12.40, திருநெல்வேலி - 10.

தென்காசி மாவட்டம்: கடனாநதி அணை - 10, ராம நதி அணை - 12, கருப்பா நதி அணை - 79, குண்டாறு அணை - 62, அடவிநயினாா்கோயில் அணை - 42, ஆய்க்குடி - 93, செங்கோட்டை - 70, தென்காசி - 42.20, சங்கரன்கோவில்- 12, சிவகிரி - 5.