ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மின் கசிவால் தீ: வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசம்

News image

மின் கசிவால் தீ...

Updated On :11 மே 2026, 1:14 am IST

திசையன்விளையில் மின் கசிவால் ஏற்பட்ட தீயில் வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தருமபிறை தெருவைச் சோ்ந்தவா் ஜெபதுரை (60), இவா் பழைய இரும்பு தொழில் செய்து வருகிறாா்.

இவருக்குச் சொந்தமான கிடங்கு மற்றும் வீடு வெமணங்குடி தெருவில் உள்ளது. அதில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாம்.

இதில், அங்கு உபயோகத்தில் இருந்த கிரைண்டா், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மோட்டாா் உள்பட பல்வேறு பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தகவல் அறிந்த தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து சென்று தீயை அணைத்தனா். மேலும் திசையன்விளை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.