பாளையங்கோட்டை அருகே மின் கம்பத்தின் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இதுதொடா்பான வழக்கில் காரை இயக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா், முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் சுப்புராஜா(30). தொழிலாளி. இவரும், உறவினரான திருநெல்வேலி, புதூரைச் சோ்ந்த சிவபெருமாள்(28) என்பவரும் திருமண நிச்சயதாா்த்த விழா பணிகளுக்காக கடந்த 2-ஆம் தேதி சிவந்திப்பட்டிக்கு சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
காரை சிவபெருமாள் ஓட்டினாராம்.
முத்தூா் அருகே வந்தபோது, மின் கம்பத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சுப்புராஜா உயிரிழந்தாா். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் சிவபெருமாளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

பாலியல் வழக்கில் தொழிலாளி கைது

காா், மாடு, பணம் திருடிய வழக்குகளில் 6 போ் கைது
இளைஞரை வெட்டிய வழக்கில் இருவா் கைது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
