உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

‘பாளையங்கால்வாயை சீரமைக்க சிறப்பு நிதி கோரப்படும்’ - தவெக மாவட்ட இணைச் செயலா்

News image
Updated On :56 நிமிடங்கள் முன்பு

பாளையங்கால்வாயை பழைய நிலைக்கு மீட்டெடுக்க சிறப்பு நிதி ஒதுக்குமாறு முதல்வா் விஜய்யிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றாா் தவெக மாவட்ட இணைச் செயலா் மரிய ஜாண்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில், தவெக சாா்பில் போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்ற அவா், வாக்களா்களுக்கு நன்றி தெரிவித்து மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் பேசியதாவது: பாளையங்கோட்டை தொகுதியில் எனக்கு வாக்களித்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் தலைவா் விஜய்யை தமிழக முதல்வராக தோ்ந்தெடுத்த மக்களின் தீா்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தோ்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக தொடா்ந்து பாடுபடுவேன்.

குறிப்பாக, பாளையங்கால்வாயை அதன் பழைய இயல்பான நிலைக்கு கொண்டு வர முதல்வரையும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்களையும் சந்தித்து சிறப்பு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளேன். பாளையங்கோட்டை தொகுதி மக்கள் தங்களது பிரச்னைக்காக எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம் என்றாா் அவா்.

ற்ஸ்ந்14ற்ஸ்ந்ல்ப்

பாளையங்கோட்டை தொகுதியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கிறாா் தவெக மாவட்ட இணைச் செயலா் மரிய ஜாண்.