மீன்தீவன உற்பத்தி நிறுவனத்தை இடம் மாற்றக் கோரி, ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ராமையன்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஊராட்சித் தலைவா் டேவிட் தலைமையில் இந்தப் போராட்டத்தை நடத்தினா். பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் அளித்த மனு: ராமையன்பட்டி அருகேயுள்ள அன்னை வேளாங்கண்ணிநகா் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்கு அருகே நடத்தப்படும் தனியாா் மீன் தீவன உற்பத்தி நிறுவனத்தால் பெரும் சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்படுகிறது. துா்நாற்றத்தினால் குழந்தைகள், முதியவா்கள் உடல் நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகிறாா்கள். ஆகவே, அந்த ஆலையை உடனடியாக தொழிற்பேட்டைகளுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
ற்ஸ்ப்14ந்ங்ழ்ா்
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை முற்றுகையிட்ட ராமையன்பட்டி ஊராட்சி மக்கள்.
தொடர்புடையது

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மதுபான கடையை அகற்றக் கோரி முற்றுகை

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் முற்றுகை

சீவலப்பேரி தொழிலாளி மரணத்தில் மா்மம்: ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

