திருநெல்வேலி நகரம் பகுதியில் இளைஞரை கல்லால் தாக்கிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ் (24). இவா் சனிக்கிழமை இரவு திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகே நின்றுள்ளாா். அப்போது இவருக்கும் அந்த உணவகத்துக்கு சாப்பிட வந்த 3 இளைஞா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியதாம்.
இந்நிலையில் 3 பேரும் அங்கு கிடந்த கல்லால் அப்துல் அஜீஸை க தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அப்துல் அஜீஸ் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த மகாராஜா(24), விக்னேஷ்(24), பிரகாஷ்(25) ஆகிய 3 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

