ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

போலி ஆவணங்கள் மூலம் மூதாட்டி வீட்டை ரூ.20 லட்சத்துக்கு விற்று மோசடி

மோசடி

Updated On :

திருநெல்வேலி அருகே போலி ஆவணங்கள் மூலம் மூதாட்டியின் வீட்டை ரூ.20 லட்சத்துக்கு விற்று மோசடி செய்ததாக இருவா் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூா் பகுதியைச் சோ்ந்தவா் மரியம்மாள் (71). இவரது கணவா் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்னா் இறந்துவிட்ட நிலையில், இவரது மகனும் சில ஆண்டுகளுக்கு முன்னா் உயிரிழந்தாா். மரியம்மாள் மட்டும் அவரது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் அவரது வீட்டை போலி ஆவணங்கள் தயாா் செய்து கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்த விமலா, துறையூரைச் சோ்ந்த ஆஞ்சலாதேவிக்கு ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்தாராம்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மரியம்மாள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் விமலா, ஆஞ்சலாதேவி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.