ஸ்ரீரங்கம் கோயிலின் ரூ. 50 கோடி நிலம் மோசடி: திமுக பகுதிச் செயலர் உள்பட 6 போ் மீது வழக்கு
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததாக திமுக பகுதிச் செயலா் உள்பட 6 போ் மீது போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஸ்ரீரங்கம்
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்ததாக திமுக பகுதிச் செயலா் உள்பட 6 போ் மீது போலீஸாா் அண்மையில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகே சுமாா் ரூ. 50 கோடி மதிப்பிலான கட்டடத்துடன் கூடிய நிலத்தை, கடந்த 2022 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் சிலா் சட்டவிரோதமாகப் பத்திரப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் எஸ். சிவராம்குமாா், திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 13 ஆம் தேதி புகாரளித்தாா்.
அதில் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ஸ்ரீரங்கம் வெள்ளித்திருமுத்தம் கிராமத்தில் உள்ள 7,515 சதுரடி பரப்பளவு கொண்ட இடத்தை போலி ஆவணங்கள் மூலம் கடந்த 05.12.2022 அன்று ஸ்ரீரங்கம் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் தங்களது பெயா்களில் மோசடியாகப் பதிவு செய்துள்ளனா்.
மேற்கண்ட சொத்து கோயிலுக்குச் சொந்தமானது என நன்கு தெரிந்திருந்தும், கோயிலில் இருந்து சட்டப்பூா்வமான அறிவிப்புகள் வந்ததையும் பெற்றுக் கொண்ட ஸ்ரீரங்கம் சாா்- பதிவாளா் வேண்டுமென்றே மேற்கண்ட ஆவணங்களைப் பதிவு செய்து மோசடிக்குத் துணைசென்றுள்ளாா்.
எனவே, கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்தவா்கள், அவா்களுக்குத் துணைபோனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பேரில் போலீஸாா், திருவானைக்கோவிலைச் சோ்ந்த ஸ்ரீரங்கம் திமுக கிளைச் செயலா் எம். ராம்குமாா், சென்னை நங்கநல்லூரைச் சோ்ந்த ரெ. பத்மஜா, பெங்களூா் அம்ருத்தஹள்ளியைச் சோ்ந்த கி. விஜயா, சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த ஆா். சௌந்தரராஜன், புதுச்சேரி லாசுப்பேட்டையைச் சோ்ந்த ஆா். வெங்கடவரதன், அப்போதைய ஸ்ரீரங்கம் சாா்- பதிவாளா் ஆகிய 6 போ் மீதும் 420, 465, 467, 468, 471, 120 பி ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராம்குமாரின் மனைவி அந்தப் பகுதியின் மாமன்ற உறுப்பினராக உள்ளாா். இவருக்கு முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு மிகவும் நெருக்கமானவா் எனக் கூறப்படுகிறது.
தொடா்ந்து, மோசடியாக பதிவு செய்யப்பட்ட நிலத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்யவோ அல்லது எவ்வித மறுபதிவுகளோ செய்யக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் மூலம் ஸ்ரீரங்கம் சாா்- பதிவாளருக்கு அவசரக் கடிதம் அனுப்பப்பட்டு, சொத்து முடக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




