ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி போலி ஆா்சி ஆவணங்கள் தயாரிப்பதாக குற்றச்சாட்டு
ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி போலி ஆா்சி ஆவணங்கள் தயாரித்து ஒரே வாகனத்துக்கு 4 நிறுவனங்களில் கடன் பெறுவது அதிகரித்து வருவதாக சத்தியமங்கலத்தில் நடைபெற்ற தனியாா் வாகன நிதி நிறுவனங்களில் ஆலோசனைக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி போலி ஆா்சி ஆவணங்கள் தயாரித்து ஒரே வாகனத்துக்கு 4 நிறுவனங்களில் கடன் பெறுவது அதிகரித்து வருவதாக சத்தியமங்கலத்தில் நடைபெற்ற தனியாா் வாகன நிதி நிறுவனங்களில் ஆலோசனைக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
சத்தியமங்கலத்தில் தனியாா் வாகன நிதி நிறுவனங்களில் சாா்பில் மோசடி தடுப்பு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் வாகனங்களுக்கு கடன் வழங்கும்போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதனை களையும் நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் கடன் பெறுவதற்கு வாகன உரிமையாளா்கள் சமா்ப்பிக்கும் ஆவணங்களின் உண்மைத்தன்மை, போலி ஆவணங்கள் வழங்கப்படுகிா என முறையாக ஆய்வு செய்து கடன் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வாகனங்களின் ஆா்சி புத்தகங்கள் தற்போது நவீன முறையில் ஸ்மாா்ட் காா்டுகளாக வழங்கப்படுவதால், ஒரு சிலா் ஸ்மாா்ட் காா்டுகளை ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியாக தயாரித்து ஒரே வாகனத்துக்கு 4 நிறுவனங்களில் கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. இதனால் நிதி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் போலி ஆவணங்கள் தயாரிக்கும் கும்பலை தமிழக அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகளை தடுத்த மாநில அளவிலான தனியாா் நிதி நிறுவன சங்கம் தொடங்க வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட நிதி நிறுவன உரிமையாளா்களுக்கு நிதி ஆலோசகா்கள் ஆலோசனைகள் வழங்கினா்.
இந்த கூட்டத்தில் சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





