
ஸ்ரீரங்கம் கோயிலின் ரூ.50 கோடி நிலத்தை ஆக்கிரமித்து திமுக அலுவலகமா? முன்னாள் அமைச்சர் சிக்க வாய்ப்பு?
ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்ததாக திமுக நிர்வாகி ராம்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது குறித்து...
ஸ்ரீரங்கம் கோயில் - கோப்புப் படம்
ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்ததாக திமுக நிர்வாகி ராம்குமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சியில் ராம்குமார் என்பவர் திமுக பகுதிச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி திருச்சி மாநகராட்சி வார்டு கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பொதுப்பணிக்காக 1930-ல் எழுதிவைக்கப்பட்ட சுமார் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை, 2022-ல் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாகவும், மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் கட்சி அலுவலகம் நடத்தி வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில், அவர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ராம்குமார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இந்த நில ஆக்கிரமிப்பின் பின்னணியில் போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய முன்னாள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் சிக்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
Summary
Complaint filed against DMK functionary Ramkumar for encroaching upon land belonging to the Srirangam temple using forged documents
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






