தேர்வில் செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்
தேர்வில் செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்

ஐஐடி மும்பையில், இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரித் தேர்வின்போது, செல்போனில் செய்யறிவு பயன்படுத்தி பதிலளித்து சிக்கியதால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
தன்னுடைய வினாத்தாளை புகைப்படம் எடுத்து செய்யறிவில் பதிவேற்றி பதில் கேட்டுள்ளார். அப்போது பேராசிரியர்களிடம் சிக்கி தேர்வறையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஐஐடி மும்பை வளாகத்தில் மாணவரின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஏராளமான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் மன நலனைக் கருத்தில் கொள்வதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோஷமெழுப்பி வருகிறார்கள்.
இதனால், அவ்வப்போது மாணவர்கள் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் நடக்கின்றன. இதனைத் தடுக்க வேண்டும். மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால், பிடிபட்ட மாணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. அவரது வகுப்பு பேராசிரியர் மூலம், மாணவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்ளுமாறு உறுதி மொழி மடடுமே பெறப்பட்டது. நடவடிக்கை எடுத்தால் அவரது கல்வி பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை பிற்பகலில் சம்பவம் நடந்த நிலையில், விடுதி அறைக்குத் திரும்பிய மாணவர் மாலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






