தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுமா? திமுக எம்எல்ஏ கேள்வி

தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் குறித்து திமுக எம்எல்ஏ கேள்வி...

Will cases filed against farmers be withdrawn under TVK rule: DMK MLA asks

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் - TN assembly

Published On :

தவெக ஆட்சியில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுமா? என திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

முந்தைய ஆட்சியில் ஜனநாயக உரிமைகளுக்காக போராடிய ஆசிரியர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று அறிவித்தார்.

அப்போது 'முந்தைய ஆட்சியில்' என்று குறிப்பிட்டதற்காகவும் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பைச் செய்ததற்காகவும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் 110 விதியின் கீழ் இதனை அறிவிக்கலாம், விதிக்கு புறம்பாக எதுவும் நடைபெறவில்லை என்று பேரவைத் தலைவர் தெரிவித்தார்.

இதனிடையே திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் "போராட்டம் செய்த விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தவெகவின் 100 நாள் ஆட்சியில், பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுமா?

எங்கள் ஆட்சியில் வழக்கு போடப்பட்டது என்று சொன்னார்கள். தவெக ஆட்சியில் போராடியவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்துவைத்திருந்தார்கள். அந்த வழக்கையும் தள்ளுபடி செய்வீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் செங்கோட்டையன், "110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட அதிகாரம் இருக்கிறது. அதனை மாற்றி வேறு வழியில் திருப்புவது சரியாக இருக்காது" என்று மழுப்பலாக பதில் கூறினார்.

Summary

Will cases filed against farmers be withdrawn under TVK rule? DMK MLA asks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.