பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!பாலியல் தொல்லை வழக்கு! பி.ஆர். சுந்தரை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு! கருணாநிதி நினைவு நாள்! மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!அக்னி - 4 ஏவுகணை சோதனை வெற்றிமாநில வருவாயை அதிகரிப்பது மாநில வருவாயை அதிகரிப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்‘வெற்றித் தறி’ விற்பனை நிலையங்கள் இன்று தொடக்கம்: முதல்வா் விஜய் அறிவிப்பு 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புயுபிஐ பரிவா்த்தனைகளுக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
/

தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!

லஞ்சம் தொடர்பாக திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால் விடுத்திருப்பது பற்றி...

News image

அமைச்சர் என். ஆனந்த் - TN Assembly

Updated On :7 ஆகஸ்ட் 2026, 11:58 am IST

தவெக ஆட்சியில் 3 சதவிகிதம் கமிஷன் கொடுத்தால்தான் வேலை நடப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தவெக அரசின் முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் இன்றுமுதல் பட்ஜெட் உரை மீதான விவாதங்கள் தொடங்கியுள்ளன.

அப்போது பட்ஜெட் குறித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, “நீர்வளத் துறையில் 3 சதவிகிதம் கொடுத்தால்தான் பில் வழங்குவோம் என்கிறார்கள். பொதுப்பணித் துறையில் 5 சதவிகிதம் கேட்கிறார்கள்” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் என். ஆனந்த் பேசியதாவது:

”கமிஷன் வாங்கினார்கள் என்றால் ஆதாரத்துடன் கூற வேண்டும். அது பழைய காலம். லஞ்சம் வாங்கினால் எங்கள் முதல்வர் இங்கே உட்கார மாட்டார். குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது” எனத் தெரிவித்தார்.

மேலும், ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

“லஞ்சம் என்பது மிகப்பெரிய குற்றம் என்று முதல்வர் தொடர்ந்து சொல்கிறார். இதுவரை எந்த அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்கவில்லை. கட்சி நிதி, அமைச்சர் நிதி என 60 ஆண்டு கலாசாரத்தை தூக்கி எறிந்துள்ளார் முதல்வர்” எனத் தெரிவித்தார்.

Summary

Commissions under TVK rule - Minister Anand challenges DMK's allegation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.