காவிரி விவகாரத்தில் இந்த அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்று அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்தார்.
பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் பேசுகையில்
"டெல்டா மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு காவிரி நீர் உயிர் ஆதாரமாக உள்ளது. எனினும் கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைப் பெற பல ஆண்டுகளாகவே சவாலாக உள்ளது.
காவிரி நீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக முதல்வரைச் சந்திக்க முதல்வர் விஜய், பெங்களூர் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த நாள் பேச்சுவார்தைக்கு உகந்தது அல்ல, வேறுநாளில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கர்நாடக முதல்வர் கூறியதால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.
ஜூலை 28 காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் தமிழ்நாடு தன்னுடைய உரிமையை வலியுறுத்தியது. அதன்படி, 4.536 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நீர் குழு அறிவுறுத்தியது. தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையமும் இந்த உத்தரவை உறுதி செய்தது.
ஆனால் காவிரி நீர் வினாடிக்கு 3,500 கன அடிக்கு பதிலாக 144 - 619 கன அடி நீரே திறந்துவிடப்படுவதனால் கர்நாடகம் நமக்கு தர வேண்டிய நீர் அளவு மேலும் அதிகரித்துள்ளது.
ஆக. 12 ஆம் தேதிக்குள் மொத்த நிலுவை நீரையும் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஆணையத்திடம் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மேட்டூர் அணை பிரச்னையில், குடிநீர் தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு அணையை பொறுப்புடன் நிர்வகித்து வருகிறது.
இதுபோன்று முன்பும் பல ஆண்டுகளில் பற்றாக்குறை காரணமாக மேட்டூர் அணை திறக்கப்படாமல் இருந்துள்ளது.
தற்போது கர்நாடக அணைகளில் இருந்து நீர் வருவதால் மேட்டூர் அணைக்கு படிப்படியாக நீர் வந்துகொண்டிருக்கிறது. அனைத்தையும் ஆய்வு செய்து பின்னர் மேட்டூர் அணை திறக்கப்படும்.
காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமருக்கும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சருக்கும் தமிழக கடிதம் எழுதியுள்ளது.
காவிரி விவகாரத்தில் இந்த அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது" என்று கூறினார்.
Summary
What measures have been taken regarding the Cauvery water issue Minister Anand explains
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி நீர் பங்கீட்டிற்காக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டபோதிலும் எங்களிடம் தண்ணீர் இல்லை: கர்நாடக அமைச்சர்

நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளைத் தொடக்கி வைத்தார் அமைச்சர் என். ஆனந்த்

இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்?
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin


